கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

2ம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :26 டிசம்பர் 2022, 10:44 am

DIN

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்கான இரண்டாம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.இதற்கான அறிவிப்பு ஜூன் 30 தேதி வெளியானது. 

இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தேவை உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில், கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் 295 மையங்களில் எழுத்துத் தேர்வு  நடைபெற்றது. 

அந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.