தம்மம்பட்டி சிவன் கோயிலில் கொள்ளை முயற்சி! கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!!

தம்மம்பட்டி சிவன் கோயிலின், வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தம்மம்பட்டி சிவன் கோயிலில் கொள்ளை முயற்சி! கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!!
Published on
Updated on
1 min read

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலின், வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம், சுவேநதியையொட்டி, 700 ஆண்டுகள் பழைமையான காசி விசுவநாதர் சிவன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், சில நாட்களாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக தினமும் ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள், கோயிலின் முன்புறம் உள்ள இரண்டு சிசிடிவி கேமிராக்களின் வயர்களை துண்டித்துவிட்டு, வாயி்ற்கதவின் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்தனர். உள்பிரகாரத்திற்குள் செல்லும் வாயிற்கதவு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் போடப்பட்டுள்ளதால், அதன் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து அந்த கதவைத் திறக்க முயன்றுள்ளனர்.

அப்போது கதவை திறக்க முடியாததால், கோயில் வெளிப் பிரகாரத்தை கடப்பாறையுடன் சுற்றி வந்துள்ளனர். சாமி சிலைகள் இருக்கும் பிரகாரத்திற்குள் நுழைய முடியாததால், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முகமூடி கொள்ளையர்கள் கடப்பாறையுடன் கோயிலுக்குள் சுற்றிவரும் காட்சி, கோயிலுக்குள் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து, தம்மம்பட்டி சிவன் கோயில் திருப்பணிக்குழு தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான வி.பி.ஆர்.ராஜா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், நடராஜ்,  கலியவரதராஜி, பழனிமுத்து, திருச்செல்வன் உள்ளிட்டோர் அறநிலையத்துறை செயல்அலுவலர் மற்றும், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அ

தன்பேரில்,  தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், கோயில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, கடந்த 10 நாட்களாக கோயிலுக்கு வந்து சென்றவர்கள், சிசிடிவி கேமிராவில் பதிவானர்களின் உருவங்களுடன் ஒத்துப்போகிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com