மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட்: கமல்ஹாசன்
மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையும் படிக்க | பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்
இந்நிலையில், பட்ஜெட்டை விமர்சனம் செய்து நடிகர் கமல்ஹாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.’ எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...