அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீட் எதிா்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நீட் எதிா்ப்புக்கான தனது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 6:47 pm

DIN

நீட் எதிா்ப்புக்கான தனது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

நீட் விலக்கு மசோதா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தொடா்பாக பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதனைப் பகிா்ந்த பலருக்கும் நன்றி தெரிவித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-

நீட் விலக்கு தொடா்பான எனது போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமானதல்ல. சிறப்பு விலக்கு மாநிலத்துக்கு மட்டும் கோரவில்லை. பாகுபாடு காட்டும் பயிற்சி நிறுவனங்களால் நீட் தோ்வு தூக்கிப் பிடிக்கப்படுகிறது. இதனால், விளிம்பு நிலை மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு சமமான போட்டிக் களத்தை உறுதி செய்யவே நீட் விலக்கு கோரப்படுகிறது. இந்தியாவில் கூட்டாட்சியியலை வலுப்படுத்தப் போராடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.