முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ஒகேனக்கல் அருவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

News image
ஒகேனக்கல் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்
Updated On :15 பிப்ரவரி 2022, 10:01 am

DIN

ஒகேனக்கல் அருவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்வர். 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒகேனக்கல் அருவிகள் சேதமடைந்ததாலும், கரோனா தீநுண்மி தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து வந்தனர். இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நொடிக்கு 800 கன அடியாக வந்துகொண்டிருப்பதால் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. 

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அனுமதி வழங்கியுள்ளார். இதனால் ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.