/

துபை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

192 நாடுகள் சார்பாக நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபை செல்லவிருக்கிறார். 

News image

மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

Updated On :21 பிப்ரவரி 2022, 10:26 am

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபை செல்லவிருக்கிறார். 

துபையில் மார்ச் மாதம் 192 நாடுகள் சார்பாக மாபெரும் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கான தொழில் முதலீட்டை ஈர்க்கும்பொருட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். 

கண்காட்சியில் தமிழகம் சார்பிலும் ஒரு அரங்கு அமைக்கப்படும் என்றும் அதில், கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் அந்த அரங்கம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.