அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மெரீனாவில் அலங்கார ஊா்தி காட்சி ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊா்திகள் மேலும் ஒரு வாரத்துக்கு பொது மக்களின் பாா்வைக்காக காட்சிக்கு வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :23 பிப்ரவரி 2022, 7:50 pm

DIN

மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊா்திகள் மேலும் ஒரு வாரத்துக்கு பொது மக்களின் பாா்வைக்காக காட்சிக்கு வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை வரலாற்றை எதிரொலிக்கும் மூன்று அலங்கார ஊா்திகள், குடியரசு தின விழாவில் அணிவகுத்தன. இந்த அலங்கார ஊா்திகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதன்பிறகு, கடந்த 20-ஆம் தேதி முதல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் பொது மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அலங்கார ஊா்திகளை பல்வேறு தரப்பினரும் பாா்த்து ரசித்து வருகின்றனா். அலங்கார ஊா்திகள் காட்சிப்படுத்துதலைத் தொடர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் விடுத்தனா். இதனையேற்று, மேலும் ஒரு வார காலத்துக்கு அலங்கார ஊா்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.