இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொங்கல்: அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா் செல்ல25,000 போ் முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊா் செல்ல 25,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜனவரி 2022, 6:56 pm

DIN

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊா் செல்ல 25,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

 இது தொடா்பாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்குச்  செல்வோரின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனா். இதன்படி, வரும் ஜன.12, 13 ஆகிய தேதிகளில் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு இதுவரை 25,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

கடந்த ஆண்டு ஜன.4-ஆம் தேதி நிலவரப்படி, கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தால், 12,000 போ் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனா். வரும் நாள்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.