கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கோட்டாட்சியர் சங்கரநாராயணன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ், வட்டாட்சியர்கள் அமுதா (கோவில்பட்டி), விமலா (விளாத்திகுளம்), நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் சுபா, வசந்த மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,30,987 ஆண்கள், 1,37,573 பெண்கள், 30 திருநங்கைகள் என மொத்தம் 2,68,590 வாக்காளர்கள் உள்ளனர்.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,05,846 ஆண்கள், 1,10,847 பெண்கள், 10 திருநங்கைகள் என மொத்தம் 2,16,703 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,23,696 ஆண்கள், 1,29,464 பெண்கள், 32 திருநங்கைகள் என மொத்தம் 2,53,192வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 7,38,485 வாக்காளர்கள் உள்ளனர்.
இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 29.55 கோடி: பலி 5.47 லட்சமாக உயர்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



