காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி புதன்கிழமை வெளியிட்டதுடன் மொத்த வாக்காளர்கள் 13,49,933 பேர் எனவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மா.ஆர்த்தி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அதனை ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)மகாராணி பெற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க | ரூ.68 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் உதவி பேராசிரியர் வேலை
இதன் பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,56,760 பேர், பெண் வாக்காளர்கள் 6,92,996 பேர், இதர வாக்காளர்கள் 177 பேர் உள்பட மொத்தம் 13,49,933 பேர்.
வாக்காளர் பட்டியல் விபரங்கள் அனைத்து வாக்குப்பதிவு அலுவலகங்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் இந்த வாக்காளர் பட்டியலை நேரில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



