தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

புதுச்சேரியில் 1-9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

புதுச்சேரியில் 1-9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜனவரி 2022, 10:42 am

DIN

புதுச்சேரியில் 1-9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதுவை மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 10-க்கும் கீழாக இருந்தது. இந்த நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குப் பிறகு, கடந்த ஒரு வாரமாக மீண்டும் கரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. 

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 444 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,722-ஆக அதிகரித்தது. 
இந்த நிலையில் புதுச்சேரியில் 1-9 வகுப்பு வரை தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.