மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: ஆதீன குருமகா சன்னிதானங்கள் பங்கேற்பு

திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதில் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் சில பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

News image
திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்த ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் சில பக்தர்கள்,
Updated On :23 ஜனவரி 2022, 10:24 am

DIN

சீர்காழி: திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதில் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் சில பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா திருநின்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக நாயகி அம்பாள் சமேத லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 

தேவாரப்பாடல் பெற்ற மாடக்கோவில் அமைப்பில் உள்ள இத்தலம் ஹஸ்த நட்சத்திரத்திற்குரிய தலமும் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Story image

திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்த பக்தர்கள்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து 8:30 மணிக்கு கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. 8:45 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதினம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோயில் அர்ச்சகர் சேதுராம குருக்கள் தலைமையில் வைதீஸ்வரன் கோயில் ரமேஷ், திருக்கடையூர் மகேஷ் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 

Story image

கும்பாபிஷேகம் நடைபெற்ற திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில்.

தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் மௌனகுரு சாமி, தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோயில் திருமடங்களின் தம்பிரான் சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், வழக்குரைஞர் சேயோன், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.   

Story image

திருநின்றியூர் லட்சுமி புரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதினம்  மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை திருநாவுக்கரசு சுவாமிகள் தலைமையில் கோயில் சிப்பந்திகள் செய்துள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.