தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. 

News image
மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :28 ஜனவரி 2022, 1:37 pm

DIN

மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. 
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளா் சகாயமேரியை கைது செய்தனா். 

ஆனால், விடுதிக் காப்பாளா் உள்ளிட்டோா் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாா் என பெற்றோா் புகாா் எழுப்பினா். இதுதொடா்பாக சிபிசிஐடி காவல் பிரிவினா் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தாா். 
இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.