எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.


சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி, அண்ணா நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
கடும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதையும் படிக்க.. அதிமுக அலுவலகத்தில் நுழைந்த சமூக விரோதிகள்: எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானம், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கட்சியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கும் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க.. அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர்: சசிகலா
எடப்பாடி பழனிசாமியுடன், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், பொன்னையன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பா வளர்மதி உள்ளிட்டோரும் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...