இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அதிமுக தலைமை அலுவலக வழக்கு: தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின்பே விசாரணை

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டசீலை அகற்றக் கோரி இரு தரப்பினரும் முறையீடு செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின்பே விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :13 ஜூலை 2022, 6:01 am

DIN


அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டசீலை அகற்றக் கோரி இரு தரப்பினரும் முறையீடு செய்துள்ள வழக்குகள் தலைமை நீதிபதி ஒப்புதலுக்கு பின்பே விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய்த் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி, ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘உண்மையான அதிமுக நாங்கள்தான். கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மனு தாக்கல் செய்தால் புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமாா் தெரிவித்தாா். 

இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமாா், இதுதொடா்பாக புதன்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தாா்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரிய வழக்கு பட்டியலிட்ட பிறகே விசாரிக்கப்படும். அதாவது தலைமை நீதிபதி ஒப்புதல் பின்பே ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் விசாரிக்கப்படும் என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.