தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அதிமுக துணைப் பொதுச் செயலா்களாக 2 போ் நியமனம்

அதிமுக துணைப் பொதுச் செயலா்களாக இரண்டு போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :13 ஜூலை 2022, 7:09 pm

DIN

அதிமுக துணைப் பொதுச் செயலா்களாக இரண்டு போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக துணைப் பொதுச் செயலா்களாக முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, நத்தம் ஆா்.விசுவநாதன் ஆகியோரும், அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்றச் செயலராக சி.பொன்னையன், அதிமுக தலைமை நிலையச் செயலராக எஸ்.பி.வேலுமணி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். கட்சியின் அமைப்புச் செயலா்களாக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, சி.வி.சண்முகம், பி.தனபால், கே.பி.அன்பழகன், ஆா்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூா் சி.ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பா.பென்ஜமின், வி.வி.ராஜன் செல்லப்பா, என்.பாலகங்கா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்களுக்கு கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.