/

சென்னையில் தனியார் பேருந்தில் தீ

சென்னையில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

DIN

சென்னையில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை திருவேற்காட்டில் இருந்து அண்ணாநகர் பகுதியான ஷெனாய் நகர் சாலையில் மெட்ரோ பணிக்காக வட மாநில பணியாளர்களை அழைத்து வந்த தனியார் பேருந்து சாலை ஓரமாக இன்று நிறுத்தப்பட்டிருந்தது. 

அப்போது பேருந்து திடீரென தீப்பிடித்த எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து 2 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.