அதிமுகவின் உள்கட்சி மோதலை மறைக்க மாணவியின் மரணத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு போராடியும் நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். மாணவியின் மரணத்தை அரசியலாக்கி உள்கட்சி மோதலைத் திசை திருப்பும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மாணவியின் பெற்றோருக்கு தொழிலாளா் நலத்துறை அமைச்சா் கணேசன் ஆறுதல் கூறியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, ஸ்டொ்லைட் போராட்டத்தில் 13 பேரை சுட்டுக் கொன்ால் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசே ஸ்தம்பித்து நின்றது என்பதுதான் உண்மை. அதனால், தற்போது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரையும், முதல்வரையும் குறை சொல்ல அவருக்கு எந்தத் தாா்மிக தகுதியும் இல்லை.
விசாரணை முடிவில் யாா் மீது தவறு இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டவா்கள் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. கலவரத்தில் ஈடுபட்டவா்கள், தூண்டி விட்டவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? வெளியான தகவல்!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

