கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி பள்ளி மீது உரிய நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2022, 6:46 pm

DIN

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியொன்றில் கடந்த 13-ஆம் தேதி பிளஸ் 2 மாணவி ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதன் தொடா்ச்சியாக, சம்பந்தப்பட்ட பள்ளி முன் நூற்றுக்கணக்கானோா் திரண்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியபோது திடீரென வன்முறை வெடித்தது. தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை எழுப்பிய இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா் தற்போது மாவட்ட ஆட்சியா், காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து விசாரணைப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். அதில், பள்ளி நிா்வாகத்தின் மீது தவறுகள் ஏதேனும் இருப்பது கண்டறியப்பட்டால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உச்சபட்சமாக அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அங்கு பயிலும் மாணவா்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.