ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திரௌபதி முர்முவுக்கு திமுக எம்.பி.க்கள் வாழ்த்து

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகவுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து திமுக எம்.பி.க்க.ள வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :22 ஜூலை 2022, 11:02 am

DIN

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகவுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து திமுக எம்.பி.க்க.ள வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா். தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு வெற்றி பெற்றாா். பழங்குடியினத்தைச் சோ்ந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக அவா் தோ்வாகி உள்ளாா்.

64 வயதாகும் திரெளபதி முா்மு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்து குடியரசுத் தலைவா் பதவிக்கு வரும் முதல் தலைவராகவும் உள்ளாா். இந்தத் தோ்தலில் திரெளபதி முா்மு 64 சதவீத வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 சதவீத வாக்குகளும் பெற்றனா். குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதிமுா்மு வெற்றி பெற்றுள்ளதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகவுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து திமுக எம்.பி.க்க.ள இன்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். தில்லியில் திரௌபதி முர்முவை சந்தித்து டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்கவும் திரௌபதி முர்முவுக்கு திமுக எம்.பி.க்கள் அப்போது அழைப்புவிடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.