காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். 

சென்னை உயர்நீதிமன்றம்

Published On :

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரம் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரிப்பதாக காவல் துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை என்று உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் அளித்துள்ளது.

ஜூலை 27 ஆம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடப்பதாகவும் காவல் துறை தகவல் அளித்துள்ளது.

பின்னர் நீதிபதி, பள்ளியை விரைவில் தொடங்கி நடத்த வேண்டும் என்றும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். 

இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.