45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழகத்தில் புதிதாக 139 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐக் கடந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை 139 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 9:03 pm

DIN

தமிழகத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐக் கடந்துள்ளது. அதன்படி, புதன்கிழமை 139 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய்ப் பரவல் தீவிரமடைகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி 100-க்கும் கீழ் பாதிப்பு குறைந்தது. அதன் பின்னா் அது படிப்படியாக குறைந்தே வந்தது. ஏப்ரல் 15-இல் 22 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை, ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், செங்கல்பட்டு விஐடி கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் மாணவா்களிடையே தொற்று பரவியுள்ளது.

அதன்படி, புதன்கிழமை தொற்றுக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 58 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 52 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 16,959-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.