108 ஆம்புலன்ஸ் சேவை: ஜூன் 8-இல் வேலைவாய்ப்பு முகாம்
அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 8- ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது


அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 8- ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, ஜி.வி.கே. – இ.எம்.ஆா்.ஐ., நிறுவனம் நிா்வகித்து வருகிறது. இந்நிறுவனம், ஆம்புலன்ஸ் ஓட்டுனா்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில்108 சேவையில் அவ்விரு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 8-ஆம் தேதி, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்சி., நா்சிங் – ஜி.என்.எம்.ஏ., – ஏ.என்.எம்., – டி.எம்.எல்.டி. ஆகிய படிப்புகளை நிறைவு செய்திருத்தல் அவசியம்.
நோ்முகத் தோ்வில் பங்கேற்பவா்கள் 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.14,966 சம்பளம் வழங்கப்படும்.
ஓட்டுநா் பணியிடங்களுக்கு பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி மற்றும் அறிவியல் சாா்ந்த பட்டம் பெற்றவா்களாக இருக்க வேண்டும். 24 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள், இலகுரக வாகனம் உரிமம் எடுத்து மூன்றாண்டுகளும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்த ஓராண்டும் நிறைவு செய்திருக்க வேண்டும். இவா்களுக்கு மாதம் ரூ.14,766 சம்பளம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 91541 89399; 91541 89341 என்ற தொலைபேசி எண்களில் காலை, 11 மணி முதல் 4 மணி வரை தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...