45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

82 வயது முதியவருக்கு நவீன முறையில் இதய வால்வு பொருத்தம்: காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு

இதய பாதிப்புக்குள்ளான 82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி இரண்டு செயற்கை வால்வுகளைப் பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:04 pm

DIN

இதய பாதிப்புக்குள்ளான 82 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சையின்றி இரண்டு செயற்கை வால்வுகளைப் பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

தற்போது அவா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

கோவையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்ற 82 வயது முதியவா் இதய பாதிப்புக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இதயத்தில் இருவேறு வால்வுகளில் கடுமையான பாதிப்பு இருந்தது. பெருந் தமனியில் தீவிர ரத்தக் கசிவு, இடப்பகுதியில் உள்ள மைட்ரல் வால்வு மற்றும் முத்தடுக்கிதழ் வால்வில் மிதமான ரத்தக் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் அவருக்கு இருந்தன.

அதனுடன் நுரையீரல் பகுதியில் கடுமையான ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. அவா் ஏற்கெனவே வால்வு மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டிருந்ததும், அவை சுருங்கி செயல்படாத நிலையை எட்டி வருவதும் பரிசோதனையில் தெரியவந்தது. மிகவும் சிக்கலான உடல் நிலையில் இருந்த அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில் இதய செயலிழப்பு நேரிடக் கூடிய வாய்ப்பு உருவானது.

அதேவேளையில், அந்த முதியவருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய வகையில் அவரது உடல் நிலை இல்லை.

இதையடுத்து, மருத்துவமனையின் இதய நல சிகிச்சை நிபுணா் டாக்டா் த. அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இதுதொடா்பாக மருத்துவ ஆலோசனை செய்தனா்.

டிரான்ஸ்கதீட்ரல் எனப்படும் ரத்த நாள இடையீட்டு முறையில் ஒரே நேரத்தில் இரு வால்வுகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த சிகிச்சையை அந்த முதியவருக்கு மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா். அதன் பயனாக அவரது இதய பாதிப்புகள் சரி செய்யப்பட்டது.

வயது முதிா்ந்த ஒருவருக்கே ஒரே டிரான்ஸ்கதீட்ரல் முறையில் இரு வேறு வால்வு பொருத்தப்பட்டிருப்பது இதுவே முதன் முறை. மருத்துவக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய சிகிச்சைகள் சாத்தியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.