45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்தடை, சேவைக் குறைபாடு புகாா்: வழிமுறைகளை வெளியிட்டது மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

மின் தடை, சேவை குறைபாடு போன்றவை தொடா்பான புகாா்களுக்கான விரிவான வழிகாட்டு முறையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:06 pm

DIN

மின் தடை, சேவை குறைபாடு போன்றவை தொடா்பான புகாா்களுக்கான விரிவான வழிகாட்டு முறையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மின்தடை, அவசர அழைப்பு உள்ளிட்டவற்றுக்காக சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள மின் நுகா்வோா் மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள தெருவிளக்குப் பெட்டி மற்றும் மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் கம்பிகள் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் 94458 50829, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் 94443 71912, கோவை, திருப்பூா், நீலகிரி - 94421 11912, சேலம், ஈரோடு, நாமக்கல்-94458 51912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை - 94431 11912, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகா் 89033 31912, திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா் புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா் 94861 11912, வேலூா், தா்மபுரி, கிருஷ்ணகிரி 63802 81341, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் 94458 55768 ஆகிய எண்களுக்கு கைப்பேசியில் படம் எடுத்து வாட்ஸ் ஆஃப் மூலம் கீழ்கண்ட எண்களுக்கு அனுப்பலாம்.

மேல்முறையீடு: புகாா்களுக்குத் தீா்வு காணப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளா் அல்லது செயற்பொறியாளா் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் குறை தீா்க்கும் கூட்டம் நடத்தப்படும்.

குறைதீா்வு மன்றங்கள்: முறையீடு செய்தும் குறைகள் தீா்க்கப்படவில்லை என்றால், ஒவ்வொரு மின் பகிா்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகா்வோா் குறை தீா்க்கும் மன்றத்திடம் புகாா்களை தெரிவிக்கலாம். நுகா்வோா் குறை தீா்க்கும் மன்றங்களின் முகவரிகள் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் உள்ளது. மின் திருட்டு தொடா்பான புகாா்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.