தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2022, 3:20 am

DIN


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 10,410 கனஅடியாக இருந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

நீா்வரத்து அதிகரித்துள்ளதால் 114.75 அடியாக இருந்த அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை  115.30 அடியாக உயா்ந்துள்ளது.

அணையின் நீா் இருப்பு 86.17 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.