அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீட் தேர்வை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்: மு.க ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய போராடி வருகிறோம். அதில் நிச்சயம் வெல்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

News image
நீட் தேர்வை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம்: மு.க ஸ்டாலின்
Updated On :11 ஜூன் 2022, 12:10 pm

DIN


நீட் தேர்வை ரத்து செய்ய போராடி வருகிறோம். அதில் நிச்சயம் வெல்வோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அவர் கூறியதாவது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய போராடி வருகிறோம். அதில் நிச்சயம் வெல்வோம்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எப்போதுமே உங்களில் ஒருவன் நான். கல்விக்கும், மருத்துவத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று முதல்வர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.