திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக விழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து சண்முகர், வள்ளி தெய்வானையை தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யும் ஸ்தானிகப் பட்டர்கள்.









