பொதுக்குழு மண்டபம் நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் மண்டபம் நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் மண்டபம் நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு நிலவுகிறது.
அதிமுக கட்சிக்குள் ‘ஒற்றைத் தலைமை’ பிரச்னை பூதாகரமாகியுள்ள நிலையில், பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மனுதாரரின் வாதத்தை கேட்டு, சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடத்திய நீதிபதி தீர்ப்பை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெறவுள்ள ஸ்ரீவாரு மண்டபம் நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று மாலை பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...