கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரக்கோணம் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

அரக்கோணம் ஜோதிநகரில் அரசு காவலா் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:22 pm

DIN

அரக்கோணம் ஜோதிநகரில் அரசு காவலா் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதே வளாகத்தில் ஸ்ரீசக்திமணிகண்டன் கோயிலும் உள்ளது. இந்த இரு கோயில்களின் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், துா்கையம்மன், நவக்கிரகம், புதியதாக அமைக்கப்பட்டுள்ள ராஜராஜேஸ்வரி, அம்மன்சிரசு, லட்சுமி, சரஸ்வதி, சூரியபகவான், துவாரசக்தி ஆகிய சந்நிதிகளின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனா் சுவாமி ராமானந்த மஹராஜ், அம்பத்தூா் ஆறுமுகம்குருசாமி ஆகியோா் பட்டாச்சாரியாா்களுடன் இணைந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்தனா்.

விழாவில் அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, ஆணையா் லதா, மேலாளா் மேகலா, டிஎஸ்பி புகழேந்திகணேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.