புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

‘இபிஎஸ் பொதுச்செயலாளராவார்’: கே.பி.முனுசாமி உறுதி

நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 ஜூன் 2022, 7:22 am

DIN

நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11இல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் மேடையிலிருந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ்ஸின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என மனு கொடுத்துள்ளனர். அடுத்து நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இது தீர்மானமாக முன்வைக்கப்படும். நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி கே.பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.