புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அதிமுக பொதுக்குழு: தனித்தனியே சிறப்பு பூஜை செய்த ஓபிஎஸ், இபிஎஸ்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் தனித்தனியே சிறப்பு பூஜைகள் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :23 ஜூன் 2022, 3:32 am

DIN

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் தனித்தனியே சிறப்பு பூஜைகள் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது. 

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது. மேலும் பொதுக்குழுவில் அதிமுகவின் அமைப்புவிதிகளில்  சட்டத்திருத்தம் மேற்கொள்ளத் தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது இபிஎஸ் தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சென்னையில் இருவரும் தனித்தனியே சிறப்புப் பூஜைகள் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது சென்னை இல்லத்தில் பசுவை வரவழைத்து பூஜை மேற்கொண்டதாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பு யாகம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.