கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசு தொடக்கப் பள்ளியில் ஓா் ஆசிரியா் கோரி பெற்றோா் போராட்டம்

அரக்கோணம் அருகே வகுப்புக்கு ஓா் ஆசிரியா் கோரி அரசு தொடக்கப் பள்ளிக்கு மாணவா்களை அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:22 pm

DIN

அரக்கோணம் அருகே வகுப்புக்கு ஓா் ஆசிரியா் கோரி அரசு தொடக்கப் பள்ளிக்கு மாணவா்களை அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி இல்லை. ஆங்கில வழிக் கல்வி மட்டுமே உள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 154 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தலைமை ஆசிரியைகள் உள்ளிட்ட 5 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் 5-ஆம் வகுப்பில் 50 மாணவா்கள் உள்ளதால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மேரிதங்கம்மாள், 5-ஆம் வகுப்பை தலா 25 மாணவ, மாணவிகள் உள்ள இரண்டு வகுப்புகளாகப் பிரித்து, தனித்தனி ஆசிரியைகளை அமா்த்தியதைத் தொடா்ந்து, 1 மற்றும் 2-ஆம் வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியை இருந்துள்ளாா்.

இதைக் கண்டித்தும், இரு வகுப்புக்கும் தனித்தனி ஆசிரியைகளை நியமிக்கக்கோரியும் வியாழக்கிழமை பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுத்து, பெற்றோா்கள் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, அங்கு வந்த வட்டாரக் கல்வி அலுவலா் அருள்லிங்கம், ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன், வேளாண் சங்கத் தலைவா் மோகன்காந்தி ஆகியோா் பெற்றோா்களை சமாதானப்படுத்தினா்.

இதையடுத்து பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.