/

மார்ச் 26, 27ல் துபை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 26, 27 தேதிகளில் துபை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

News image
Updated On :2 மார்ச் 2022, 10:37 am

DIN

கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 26, 27 தேதிகளில் துபை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

துபையில் 192 நாடுகள் பங்கேற்கும் மாபெரும் கண்காட்சி இம்மாதம் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 26, 27 தேதிகளில் துபை பயணம் செல்கிறார். 

உலக நாடுகளிடம் இருந்து தமிழகத்திற்கான தொழில் முதலீட்டை ஈர்க்கும்பொருட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். 

கண்காட்சியில் கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் தமிழகம் சார்பில் அரங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.