தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
ரஷியா-உக்ரைன் போர்ச் சூழல் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. குறிப்பாக, கடந்த திங்கள்கிழமை (மார்ச் 7) ஒரு சவரன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. மேலும், விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ.40,448-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.392 உயர்ந்து ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.85 உயர்ந்து ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.1.60 காசுகள் அதிகரித்து ரூ. 77.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 5,105
1 பவுன் தங்கம்............................... 40,840
1 சவரன் வெள்ளி............................. 77.60
1 கிலோ வெள்ளி.............................77,600
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,056
1 சவரன் தங்கம்............................... 40,448
1 கிராம் வெள்ளி............................. 76.00
1 கிலோ வெள்ளி.............................76,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...