சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:42 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.216 குறைந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், பிப்ரவரி 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மார்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது.

இதன்பிறகு, விலை குறைந்து வருகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.39 குறைந்து, ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.0.50 குறைந்து, ரூ.72.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.72,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,792

1 சவரன் தங்கம்............................... 38,336

1 கிராம் வெள்ளி............................. 72.30

1 கிலோ வெள்ளி.............................72,300


செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,831

1 சவரன் தங்கம்............................... 38,648

1 கிராம் வெள்ளி............................. 72.80

1 கிலோ வெள்ளி.............................72,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.