திருப்பூர்: ரமலான் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகரில் உள்ள 60 கடைகளில் ஒரே நாளில் 13 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் காங்கயம் சாலை, பெரியகடை வீதி ஆகிய பகுதிகளில் 60 பிரியாணிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் தீபாவளி, பொங்கல், ரமலான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு அதிக அளவிலான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று காரணமாக பிரியாணி விற்பனையும் சற்று மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

அந்தவகையில், திருப்பூரில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் இருக்கும் காங்கயம் சாலையில் உள்ள அனைத்து பிரியாணிக் கடைகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 10 மணி முதலே கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
இதில், ஒரு சில கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்தனர். மேலும், ஒரு சில கடைகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பிரியாணிகளை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக காங்கயம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பிரியாணிக்கடைகளின் முன்பாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர்கள் கூறுகையில்,
காங்கயம் சாலை, பெரிய கடை வீதிளில் உள்ள பிரியாணி கடைகளில் வார நாள்களில் 3 டன் வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 4 டன் வரையிலும் பிரியாணி விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது ரமலான் பண்டிகையை ஒட்டி ஒரே நாளில் 13 டன் பிரியாணி விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும், சில கடைகள் அடைக்கப்பட்டு ஆர்டரின் பேரில் மொத்தமாக பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju
டெஸ்ட்டில் முச்சதங்கள் குறைந்ததற்கு டி20 கிரிக்கெட் காரணமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

கடவுளின் குழந்தை நான்... நள்ளிரவில் பதிவிட்ட விஷால்!

கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



