தொடர் மழையால் நிரம்பியது மோர்தானா அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக - ஆந்திர எல்லையோரம் தமிழக பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும்.

இந்த அணை 11.50 மீட்டர் உயரமும் 261  மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட  இந்த அணை தற்போது ஆந்திர - தமிழக எல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும் மோர்தானா அணைக்கு நீர் ஆதாரமாக உள்ள ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை வேகமாக நிரம்பியது.

இதனிடையே இன்று காலை மோர்தானா அணை தனது முழு கொள்ளளவை எட்டி அணை முழுவதும் நிரம்பியது. மேலும் தற்போது 31  கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் உபரி நீராக 31 கன அடி தண்ணீர் அணையில் இருந்து உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மோர்தானா அணை நிரம்பியதால் குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதிகளில் உள்ள  பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com