இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கப்பட்டது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகின்றது.
திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சார்பிலும் ஒரு மாத ஊதியம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 1 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வரிடம் அளிக்கப்பட்டது.
இன்று, திமுகவின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார்.
இதையும் படிக்க | இலங்கை மக்களுக்கு உதவி: திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேலம், நாமக்கல் வழியாக கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்

கோடை வறட்சி: வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் வனத் துறையினா்

மெரீனாவில் கடைகள் ஒதுக்கீட்டை எதிா்த்த வழக்கின் பின்னணியில் மாஃபியா? உயா்நீதிமன்றம் சந்தேகம்

ஒசூா் மாநகராட்சி பூங்கா திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

