சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

ஆளில்லாத விழாவில் முக்கால்மணி நேரம் பேசிய முன்னாள் அமைச்சர் (விடியோ)

ஆளில்லாத விழாவில் ஆளே இல்லாத இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முக்கால்மணி நேரம் பேசியுள்ளார். 

News image
கீழஉரப்பனூர் கிராமத்தில் விழாவில் பேசிய ஆர்.பி. உதயகுமார்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:18 am

DIN

ஆளில்லாத விழாவில் ஆளே இல்லாத இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முக்கால்மணி நேரம் பேசியுள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கீழஉரப்பனூர் கிராமத்தில் இந்திரா காலனி பகுதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

விழாவிற்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், நாடக மேடையை திறந்துவைத்தார். 

அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் நாடக மேடையில் அமர்ந்தவாறு மக்களிடம் பேசத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால், அவர் பேச்சைக் கேட்க அங்கு நான்கு சிறுவர்களும் சில பெண்களும் மட்டுமே இருந்துள்ளனர். ஆளில்லாத விழாவில் ஆளே இல்லாத இடத்தில் முன்னாள் அமைச்சர் முக்கால் மணி நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.