பேரறிவாளன் விடுதலையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் எம்,பி.யும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், 'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸும் ஒன்றையொன்று விமர்சிப்பது புதிதல்ல. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணி வலுவாகத் தொடர்கிறது. அவ்வளவு எளிதில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரித்துவிட முடியாது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் கொல்லப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் காங்கிரஸ் கட்சியினர் தெளிவாக உள்ளனர்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



