மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையில் 2வது நாளாக என்ஐஏ விசாரணை

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மதுரையில் இரண்டாவது நாளாக  தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News image
கோப்புப் படம்
Updated On :26 நவம்பர் 2022, 6:01 am

DIN

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மதுரையில் இரண்டாவது நாளாக  தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது. 

ஆட்டோவில் பயணித்து காயமடைந்த முகமது ஷாரிக் (24) இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவர்,  கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்தவர். 

ஷாரிக் மதுரையில் 15 நாள்கள் தங்கியிருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு பலரைச் சந்தித்துப் பேசியது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, மங்களூரு போலீஸாா் மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் என்ஐஏ அதிகாரிகளுடன் மதுரை நகரில் உள்ள சில தங்கும் விடுதிகளுக்குச் சென்று, முகமது ஷாரிக் குறித்து விசாரணை நடத்தினா்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.