தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தாம்பரம்-திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளியொட்டி தாம்பரம்-திருநெல்வேலி இடையே நாளை (அக்.20-ஆம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 8:30 pm

DIN

தீபாவளியொட்டி தாம்பரம்-திருநெல்வேலி இடையே நாளை (அக்.20-ஆம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: தீபாவளி பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் (19 பெட்டிகள்) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அக்.20-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, வழியாக மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இதே போல், திருநெல்வேலியில் அக்.21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு அதே மாா்க்கத்தில் மறு நாள் அதிகாலை 3.20 மணிக்கு, தாம்பரம் வழியாக எழும்பூா் வந்து சேரும். இதற்கான முன்பதிவு புதன்கிழமை (அக்.19-ஆம் தேதி) காலை 8 மணியில் இருந்து தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.