ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சார்ஜாவில் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு வழங்கப்படும் அனைத்துலக விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சார்ஜாவில் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
Updated On :28 அக்டோபர் 2022, 11:06 am

DIN


ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெறவிருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு வழங்கப்படும் அனைத்துலக விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 - ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  அனைத்துலக விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31.03.2023 என்றும் பதிவுக் கட்டணம் கிடையாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11- ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு, அனைத்துலக விருதுகள்.. சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த பேராசிரியர், சிறந்த தமிழ் அறிஞர், சிறந்த தமிழ்த் தொண்டு,  சிறந்த தமிழ்த் துறை - கல்லூரி / பல்கலைக்கழகம், சிறந்த தமிழ்ப் பள்ளி, சிறந்த தமிழாசிரியர் (பள்ளி).   சிறந்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், சிறந்த தமிழ் அமைப்பு / சங்கம் / கழகம், சிறந்த பதிப்பாளர் / பதிப்பாசிரியர்,  சிறந்த முகநூல் எழுத்தாளர் (சமூக வலைதளம்), சிறந்த யூடியூப் தமிழ் காணொளிகள் (வீடியோ), சிறந்த ஊடகவியலாளர், சாதனை பெண்மணி, சாதனை இளைஞர் - ஆண் / பெண் ஆகிய 15 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்தப் பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற விண்ணப்பிப்பவர்கள், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் (2023 ஆம்) ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் நடைபெறவிருக்கிறது.

மாநாடு பற்றிய அறிவிப்பை இந்த நிறுவனத்தின் இந்திய கிளை வெளியிட்டிருந்தது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற உள்ளது. மாநாட்டுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சார்ஜாவில் உள்ள லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகின்றன.

மேலும் விவரங்களை www.iatrinternational.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு சென்னை தி.நகரிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை 044-28340488 / 96770 37474 / 98422 81957 / 96000 07819 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.