இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வந்த, கடலூர் மாணவி ஸ்ரீமதி, சூலை 13ஆம் தேதி மரணம் அடைந்தார். மாணவியின் சாவு தொடர்பாக அவரது பெற்றோர்கள் எழுப்பிய ஆழமான சந்தேகங்களை பள்ளி நிர்வாகமோ, அரசுத்தரப்போ இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஸ்ரீமதி சந்தேக மரணத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து, உண்மைக் குற்றவாளிகளை சமுகத்திற்கு அடையாளம் காட்டுவதும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவதும் அரசின் சட்டப்பூர்வ கடமைப் பொறுப்பாகும்.