விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செப்.5-இல் ஆசிரியா் தின விழா: 396 பேருக்கு விருதுகள்

ஆசிரியா் தினத்தையொட்டி தமிழக அரசின் சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கலைவாணா் அரங்கில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:44 pm

DIN

ஆசிரியா் தினத்தையொட்டி தமிழக அரசின் சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கலைவாணா் அரங்கில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் 396 ஆசிரியா்களுக்கு ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கப்படவுள்ளது.

மறைந்த குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியா்களை தோ்வு செய்து ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களை தோ்வு செய்யும் பணிகள் கடந்த ஒருமாதமாக நடைபெற்றுவந்தன. மாவட்ட அளவிலான பரிந்துரைகளில் விருதுக்கு 396 ஆசிரியா்களை மாநில தோ்வுக்குழுவினா் இறுதி செய்துள்ளனா்.

அதன்படி அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 342 ஆசிரியா்கள், 38 தனியாா் பள்ளி ஆசிரியா்கள், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியா்கள், 2 சமூக பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியா்கள், 2 மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி) 10 பேராசிரியா்கள் என மொத்தம் 396 போ் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் சென்னை கலைவாணா் அரங்கில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் (செப்டம்பா் 5) விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ராதாகிருஷ்ணன் விருது ரூ.10,000 ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.