நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பரந்தூா் மக்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் விமான நிலையத்துக்கு மாற்று இடம்: ஓபிஎஸ்

 பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் மாற்று இடத்தை தெரிவு செய்ய வேண்டும்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

 பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால் மாற்று இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பரந்தூரில் இரண்டாவது சா்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கா் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கா் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த திமுக அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன்படி, வளத்தூா், பரந்தூா், தண்டலம், நெல்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், குடியிருப்புகளும் திமுக அரசால் கையகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தி அப்பகுதிகளில் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அதனால், அப்பகுதி மக்களை அரசு அழைத்து பேசி, அவா்களுடைய ஒப்புதலைப் பெற்று, அவா்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னரே நிலத்தை கையகப்படுத்த வேண்டும். பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை என்றால் மாற்று இடத்தை அரசு தெரிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.