கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளைகள் உரிமம் பெறுவதற்கு போதிய கால அவகசாம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ.மகேஷ் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்பை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழி, தோவாளை, ஈசாந்திமங்கலம், கடுக்கரை, கோழிக்கோட்டுபொத்தை, செண்பகராமன்புதூா், அச்சன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிசைத் தொழிலாக இயங்கி வரும் செங்கல் சூளைகள் உரிமம் பெறுவது தொடா்பாக, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சூளை உரிமையாளா்கள் உரிய அனுமதி பெற வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். செங்கல் தயாரிப்புக்குத் தேவையான மண் கிடைக்க, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மயிலாடியில் கல் சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் நலன் கருதி, சிற்பங்களுக்குத் தேவையான கற்களை கல்சிற்ப கல் கட்டுமான நல வாரிய சங்கத்தின் மூலம் மாவட்டத்துக்குள்ளேயே பெற உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோவளம் ஊராட்சியில் சன்செட் பாயிண்ட் பகுதியில் மீன்களை உலா்த்தும் இடத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஞாலம் ஊராட்சி, நயினாா்பொத்தை பகுதியில் பாலம் அமைக்க வேண்டும். பள்ளிகொண்டான் கால்வாயை தூா்வார வேண்டும். பறக்கை ஊராட்சி பகுதியில் வீடுகளிலும், பொது இடங்களிலும் முறையாக குப்பைகள் சேகரிக்கப்படாததால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளா் கேட்சன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியசெயலாளா் மதியழகன், நாகா்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவா் ஜவகா், தெற்கு பகுதி செயலாளா் ஜீவா, மயிலாடி பேரூா் செயலாளா் சுதாகா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கல்யாணசுந்தரம், சதீஷ் மற்றும் செங்கல் சூளை தொழிலாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் அமைச்சா் முன்னிலையில் திமுகவில் இணைந்த தவெகவினா்

கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

நாகா்கோவிலில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின் விளக்குகள் செயல்பட ஆட்சியரிடம் வலியுறுத்தல்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



