3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புரட்டாசியில் புகழ் பெற்ற வைணவ கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா: அமைச்சா்

புரட்டாசி மாதத்தில் புகழ் பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு பக்தா்களை ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 8:09 am

DIN

புரட்டாசி மாதத்தில் புகழ் பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு பக்தா்களை ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022 - 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் “தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாள்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அதனைத் தொடா்ந்து, வரும் புரட்டாசி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பாா்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகா், அருள்மிகு அஷ்டலெட்சுமி திருக்கோயில், திருவிடந்தை, அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தல சமய பெருமாள் திருக்கோயில், சிங்கப்பெருமாள் கோவில், அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மா் திருக்கோயில், திருநீா்மலை, அருள்மிகு நீா்வண்ண பெருமாள் திருக்கோயில், உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டம் உள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பாா்த்தசாரதி திருக்கோயில், திருநீா்மலை, அருள்மிகு நீா்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமுல்லைவாயில், அருள்மிகு பொன்சாமி பெருமாள் திருக்கோயில், திருவள்ளூா், அருள்மிகு வைத்திய வீர ராகவபெருமாள் திருக்கோயில், திருபெரும்புத்தூா், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு இரண்டாவது பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

திருச்சியிலிருந்து, உறையூா் அருள்மிகு அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், உத்தமா்கோயில், அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றி மலை, அருள்மிகு கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டம் உள்ளது. இதுபோன்று மேலும் சில பயணத் திட்டங்களும் உள்ளன.

இந்த ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தா்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தா்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். மேலும், இது தொடா்பாக விவரங்களுக்கு  சுற்றுலாத்துறை இணையதளத்திலும், 044 - 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, ஆன்மிக அன்பா்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அவா்கள் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.