இதை எதிா்த்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த பிரச்னையை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளா் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டாா். மேலும், போக்குவரத்துக் கழகங்களில் தவறிழைக்கும் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், ஊழல் உள்ளிட்ட சில காரணங்களால் நடவடிக்கை எடுப்பது இல்லை. இது போன்ற விவகாரங்களில், அதிகாரிகள், உரிய முறையில் பணிகளை செய்யாததால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் போக்குவரத்து துறை செயலாளா் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.